பால் பணியாரம் செய்ய தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 100 கிராம்
உளுந்து – 75 கிராம்
பசும்பால் – 200 கிராம்
தேங்காய் பால் – 1டம்ளர்
சர்க்கரை – 100கிராம்
ஏலக்காய் பொடி – சிறிதளவு
பொரிக்க (எண்ணெய்) -தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சரிசியையும், உளுந்தையும் எடுத்து ஐந்து மணிநேரம் ஊற வைத்து, பின் அதை கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மையாக நன்கு அரைத்து கொள்ளவும்.
இரண்டாவது, பசும் பாலைக் நன்கு காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் போடி, தேங்காய் பால் சேர்த்து இறக்கவும்.
மூன்றாவதாக, அரைத்து வைத்திருக்கும் மாவை சுண்டைக்காய் சைஸாக கிள்ளி எடுத்து உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
நான்காவதாக அடுப்பில் பணியார கல்லை வைத்து எண்ணெய் விட்டு மாவு உருண்டைகளை போட்டு வெள்ளை நிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த உருண்டைகளைக் கொதிக்கிற வெந்நீரில் போட்டு, உடனே எடுத்து தயாராக வைத்திருக்கும் பாலில் போடடால் சுவையான பால் பணியாரம் ரெடி.