கொத்துக்கறி பொடி-மாஸ் செய்ய தேவையான பொருட்கள்:
கொத்துக்கறி – கால் கிலோ
நல்லெண்ணெய் – ஐந்து கரண்டி
மிளகு – 10
வெங்காயம் – 50 கிராம்
கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
இஞ்சி – சிறிது
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – உப்பு
செய்முறை:
வெங்காயம் 50 கிராம், கொத்தமல்லி 2 தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு 10 என அனைத்தையும் ஒன்று சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, சுத்தம் செய்த கறியையும் போட்டு வதக்கவும்.
அதனுடன் அரைத்த பொடியையும் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி வைத்து சிவக்க வெந்ததும் தீயை குறைத்து வைத்து வதக்கி, சிறிது தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும். இப்போது கொத்துக்கறி பொடி-மாஸ் ரெசிபி ரெடி.