நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதத்தில் மேலும் ஒரு நீதி தொகுப்பு திட்டத்தை அறிவிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் 15-வது நிதி குழுவின் தலைவர் திரு. என்.கே சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்து இருப்பதற்கான காரணம் குறித்த ஆய்வை தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். ஆய்வில் சில தரவுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்திலோ பொதுமக்களிடமோ உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மேலும் ஒரு நிதி தொகுப்புத்திட்டம் வெளியாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறினார்.