Categories
தேசிய செய்திகள்

பி.இ. மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிப்பு…!!

ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து இருக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும் காலநீட்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு மாணவர் சேர்க்கை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகளை டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கலாம் என்றும் ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட கொரோனா தடுப்பு  நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆன்லைன் ஆஃப்லைன் முறையிலோ அல்லது இரண்டு முறைகளை சேர்த்தோ வகுப்புகள் நடத்தப்படலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |