கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு பலன்களும் கலந்தே காணப்படும். சில தடைகளை கடந்து பணியில் வெற்றிப் பெறுவீர்கள். இன்று விவாதம் ஏற்படும் என்ற காரணத்தினால் உங்களின் துணையுடன் உறவு மகிழ்ச்சிகரமாக இருக்காது.
நீங்கள் அனுசரித்துப் போவதன் மூலம் வார்த்தையில் நிதானத்தை கடைப்பிடிப்பதன் மூலமும் நன்மைப் பெறலாம். இன்று பணவரவுடன் செலவும் கலந்தே காணப்படும். உங்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி அதன்படி செயலாற்றுவது நல்லது. இன்று தலைவலியால் நீங்கள் அவதிப்பட நேரிடலாம். ஆரோக்கியத்திற்காக பணம் செலவுசெய்ய நேரிடும். தியானம் மேற்கொள்வதன் மூலம் நல்ல ஆறுதலைப் பெறலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். இன்று அனுமன் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நல்லபலனைப் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.