நீங்கள் முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் அது உங்கள் குடும்பத்தினரை ஆபத்தில் தள்ளும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசும்போது, ” சமீப காலத்தில் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை நாம் பார்த்துள்ளோம். அதில் மக்கள் அனைவரும் எதையும் பற்றி கவலைப்படாமல் இருப்பது தெளிவாக தெரிகிறது. அவ்வாறு செய்வது சரியல்ல.
நீங்கள் முகக் கவசங்கள் அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது, அது உங்கள் குடும்பத்தினரை ஆபத்தில் ஆழ்த்தும். நாம் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து பின்னர் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் முக கவசம் அணியாதது மட்டுமே” என்று அவர் கூறியுள்ளார்.