சீன துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை தயவு செய்து சொல்லுங்கள் என்று ராகுல் காந்தி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணியளவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று மாலை ஆறு மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிரப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மதிப்பிற்குரிய பிரதமர், உங்களுடைய ஆறுமணி உரையாடலில், சீனாவின் துருப்புகள் எப்போது வெளியேற்றப்படும் என்ற தேதியை தயவு செய்து சொல்லுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.