சைனீஸ் புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு அழாக்கு
குடைமிளகாய் – 1
கேரட் – 1
பீன்ஸ் – 100 கிராம்
கோஸ் – 100 கிராம் துருவிய
புதினா – 1 கட்டு சிறிது
பச்சை மிளகாய் – 5
வெள்ளை மிளகு பொடி – 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் பாத்திரதை வைத்து அதில் 1 ஆழாக்கு அரிசியை எடுத்து ஒன்றுக்கு, இரண்டு என்கிற அளவில் நீர்விட்டு வேக வைக்கவும். சாதம் உதிராக இருக்கும் அளவுக்கு வேக வைத்து ஆற வைக்கவும்.
காய்கறிகளான குடை மிளகாய், காரட், பீன்ஸ், கோஸ் ஆகியவற்றை 1 அங்குல நீளத்திற்கு நறுக்கியதுடன் பச்சை மிளகாய் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக வைத்து எடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதனுடன் புதினா இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அதனுடன் நறுக்கிய காய்கறிகளுடன், உப்பு சேர்த்து ஒரு தடவை புரட்டி ஆற வைத்திருந்த சாதத்தில் கொட்டவும்.
இறுதியில் அஜினோமோட்டோ, வெள்ளை மிளகு பொடி சேர்த்து நன்கு கிளறினால் சூடான, மற்றும் சுவையான சைனீஸ் புலாவ் ரெடி.