Categories
தேசிய செய்திகள்

வெள்ளம் சூழ்ந்த தெலுங்கானா… 15 கோடி நிதி வழங்கிய… டெல்லி முதல் மந்திரி…!!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு நிவாரண தொகையாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 15 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அதிலும் சிலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு நிவாரண உதவியாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 15 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து கனமழை மற்றும் வெல்லம் ஆகிய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹைதராபாத்தின் சகோதரர் மற்றும் சகோதரிகள் டெல்லி உறுதுணையாக நிற்கும். வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |