தமிழர்களின் உடைய கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை காக்கக்கூடிய பெரும் போர் அந்தப் போரிலே வெல்வோம் என முக.ஸ்டாலின் சூளுரைத்தார்.
திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையால் கல்வி உரிமை பரிபோகிவிட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி உரிமை பரிக்கப்பட்டு விட்டது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமை பரிக்கப்பட்டு விட்டது. குடி உரிமை சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை சீக்கிரம் பறிபோக போகுது. அண்ணா பல்கலைக்கழகத்தை திருட முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கிற மத்திய அரசு பணிகள் அனைத்திலும் வெளி மாநிலத்து காரர்களை கொண்டு வந்து புகுத்தினார்கள். இந்தப் பணிகளுக்காக விண்ணப்பித்த தமிழ்நாட்டு இளைஞர்களின் விண்ணப்பங்களை திட்டமிட்டு நிராகரிக்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தை துணைவேந்தர்கள் ஆக வெளி மாநிலத்தை சார்ந்தவர்களுக்கு கொண்டுவந்து நியமிக்கிறார்கள். சமூகநீதி எனப்படும் இட ஒதுக்கீடு உரிமையை எந்த வகையிலாவது தடுத்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்விக்கூடங்களுக்கு உள்ளேயே நுழைய விடாமல் தடுக்கிறதுக்கு வேண்டி எல்லா தந்திரங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள். இதை எல்லாத்தையும் நாம் தடுத்தாக வேண்டிய கடமையும், பொறுப்பும் திமுக உடைய தோள்களில் சுமத்தப்பட்டு இருக்கு.
இந்த உரிமைகளை எல்லாம் போராடியும், வாதாடியும் பெறவேண்டிய கடமை நமக்கு இருக்கு. சட்டமன்றம் ஆக இருந்தாலும், நாடாளுமன்றம் ஆக இருந்தாலும், நீதிமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும், எங்கும் எதிலும் தமிழருடைய உரிமைகளை தமிழ்நாட்டினுடைய அந்த உரிமைகளை நாம் பெற்றாக வேண்டும்.
அந்த உரிமைகளை நாம் பெற்றாக வேண்டும் என்று சொன்னாள். இது தந்தை பெரியார் அவர்கள் நமக்கு வழங்கி இருக்கக் கூடிய கட்டளை. பேரறிஞர் அண்ணா அவர்கள் நமக்கு இட்டு இருக்கக்கூடிய உத்தரவு. தலைவர் கலைஞர் அவர்கள் நமக்குள் விதைத்து இருக்கக்கூடிய விதை. எனவே நடக்க இருக்கிற தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல தமிழர்களை காக்கக் கூடிய பெரும் போர். தமிழர்களின் உடைய கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை காக்கக்கூடிய பெரும் போர் அந்தப் போரிலே வெல்வோம் என முக.ஸ்டாலின் சூளுரைத்தார்.