Categories
மாநில செய்திகள்

டெல்டாவில் மழையால் நனைந்து வீணாகும் நெல்மணிகள்…!!

டெல்டா மாவட்டங்களில் மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முன் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலையில், மலையில் அவை நனைந்து வீணாகும் சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  விளைந்து விலை இல்லை என்று அவர் நிலையாக டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்கள் முன்பு உள்ள நெல் மூட்டைகள் நனைந்து முளைத்து வீணாவதாக வைத்துள்ளார்.

உரிய முறையில் கொள்முதல் நடைபெறாமல் ஆள்வோரின் ஊழல் பெருச்சாளிகள் செய்யும் அட்டகாசங்கள் ஓயவில்லை என காட்டமாகவே விமர்சித்துள்ளார். காவேரி காப்பாள் என பட்டம் சூட்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |