ராஜஸ்தானில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்ற பழங்குடியினர் பிரிவில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதப்பூர் மாவட்டம் கங்காபூர் நகரத்தை சேர்ந்தவர் மிர்தும். இவர் நீட் தேர்வில் 320 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மிருதுல் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலில் மிருதுல் 720க்கு 650 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் எஸ்டி பிரிவுகள் பிரிவின் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
மேலும் பொது பிரிவில் இந்திய அளவில் 3,577 இடம் பிடித்துள்ளார். நடந்த தவறை தேசிய தேர்வு முகமை ஒப்புக் கொண்டு திருத்தம் செய்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மிருதுல் தெரிவித்துள்ளார். ஆனால் நீட் தேர்வில் இதுபோன்ற தவறுகள் நடப்பது அதிர்ச்சி அளிப்பதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.