கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டதாக யாரும் கருத வேண்டாம் என்றும் பண்டிகைக்காலம் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா காலத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி 7-வது முறையாக நாட்டு மக்களிடையே உரையாற்றினர். அப்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் வெளியே வந்துள்ள நிலையில் கொரோனா தொடர்ந்து நீடிப்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கொரோனா பாதிப்பில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றி இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் பொருளாதார நிலைமை மெல்ல மெல்ல முன்னேறி வருவதாகவும் பல நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு என்றும் தெரிவித்தார்.
நாட்டு மக்களிடையே கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை கொரோனா குறித்து பொதுமக்கள் அலட்சியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர் கொரோனா முற்றிலும் ஒழிந்துவிட்டதாக யாரும் கருத வேண்டாம் என்றும் தெரிவித்தனர். கொரோனா போரில் இறுதி வெற்றி அடையும் வரை அலட்சியம் வேண்டாம் என்றும் பண்டிகைக்காலம் என்பதால் பொதுமக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்