Categories
உலக செய்திகள்

இந்த ஊதியம் போதாது… நான் பதவியை விட்டு விலகுகிறேன்… இங்கிலாந்து பிரதமர்… திடீர் அறிவிப்பு…!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது பெற்று வரும் ஊதியம் போதாது என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.

தன் குடும்பத்தை நடத்துவதற்கு, தற்போது பெற்று கொண்டிருக்கும் ஊதியம் போதாது என்பதால் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரை வெளியிட விருப்பம் கொள்ளாத ஆளும் கட்சி எம்பிக்கள் இரண்டு பேர் இந்த தகவலை அளித்துள்ளனர். அவ்வாறு வெளியான தகவலில், “இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது 1,50,402 பவுண்டுகள் ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்த மதிப்பு அவரின் முந்தைய வருவாய் ஓடு ஒப்பிடும்போது மிகக் குறைவாக உள்ளது. அவர் பிரதமராவதற்கு முன்னர் நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதி மாதம்தோறும் 23,000 பவுண்டுகள் ஊதியமாக பெற்றுள்ளார்.

மேலும் போரிஸ் ஜான்சன் ஆகிய ஆறு குழந்தைகள் உள்ளன. அவர்களில் சிலர் இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தேவையான செலவுகளை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் போரிஸ் ஜான்சன் உள்ளார். அவரின் முன்னாள் மனைவிக்கு, விவாகரத்து நடைமுறையின்படி மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை அளிக்க வேண்டும். அதனால் தற்போது பெற்று கொண்டிருக்கும் ஊதியம் போதாது என்பதால் அடுத்த வருடம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |