Categories
தேசிய செய்திகள்

சட்டங்களை உருவாக்குவது இறையாண்மை உரிமை… ஐநாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா…!!!

மனித உரிமைகள் என்ற சாக்கு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்ட விதி மீறல்களை மன்னிக்க முடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் பற்றியும், என்.ஜி.ஓக்கள் மீது கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது பற்றியும் ஐநா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் மிட்செல் பேச்லேட் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அது மட்டுமன்றி சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டது பற்றியும் தனது கருத்தை கூறிய அவர், என்ஜிஓ மற்றும் மனித உரிமைகளை இந்திய அரசை கட்டாயம் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் தெரிவித்துள்ள கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.

இதுபற்றி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறும்போது, ” இந்தியா, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஒரு சுதந்திரமான நீதித் துறையை அடிப்படையாக கொண்டு இருக்கும் ஒரு ஜனநாயக அரசியல் நாடு. சட்டங்களை உருவாக்குவது என்பது ஒரு இறையாண்மை உரிமையாகும். மனித உரிமைகள் என்ற சாக்கு போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்ட விதி மீறல்களை மன்னிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |