தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் சிம்பு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தத் திரைப்படம் சென்டிமென்ட், எமோஷன், காதல், ஆக்ஷன் மற்றும் காமெடி என அனைத்தும் கலந்த படமாக உருவாகி கொண்டிருக்கிறது. அந்தப் படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்துள்ளார். அதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பாரதிராஜா ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு என்ற படத்தில் சிம்பு நடிக்கிறார்.
இந்த நிலையில் நடிகர் சிம்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், வருகின்ற வியாழக்கிழமை முதல் சமூக வலைத்தளங்களான டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் தளங்களில் தான் இணைய இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கான வீடியோ பதிவும் தற்போது வெளியாகியுள்ளது. அதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.