Categories
மதுரை மாவட்ட செய்திகள்

30 ரூபாய் மது… ஆத்திரமடைந்து உயிரோடு கொளுத்திய நபர்… உயிரிழந்த பரிதாபம்…!!!

மதுரை மாவட்டத்தில் 30 ரூபாய் மதுவுக்காக உயிரோடு ஒருவர் எரிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், திருமால்பூர் அதை அடுத்துள்ள கூல் பாண்டி என்ற கிராமத்தில் 29 வயதுடைய மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் முன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே இடத்தில் அப்பகுதியை சேர்ந்த அழகர் என்பவர் தள்ளுவண்டியில் மீன் வியாபாரம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மணிகண்டன் மது வாங்கிவிட்டு, அப்பகுதியில் ஒரு மறைவான இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது அழகர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அங்கு வந்து, மணிகண்டனிடம் தகராறு செய்துள்ளனர். குடிபோதையில் இருந்த மணிகண்டன் மீது பெட்ரோலை ஊற்றி, ஓட ஓட அவரை தீ வைத்து கொளுத்தியுள்ளனர். அவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ” சம்பவத்தன்று மணிகண்டன் மற்றும் அழகருக்கு இடையே மதுபானத்தை பங்கு வைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தனக்கு சிறிதளவு மது தரவேண்டும் என கூறி 30 ரூபாயை அழகர், மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்ட மணிகண்டன் மதுவை கொடுக்காததால் ஆத்திரமடைந்த, தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |