இந்திய எல்லையில் அத்துமீறி உள்ளே நுழைந்த சீன வீரரை இந்திய ராணுவர்கள் பிடித்து, அந்நாட்டிடம் ஒப்படைத்தது.
லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் போக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆயிரக்கணக்கான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் எல்லையில் நடக்கும் பதட்டத்தை குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற டேம்சாக் ஒரு பகுதியில், சீன வீரர் ஒருவர் எல்லையை தாண்டி உள்ளே வந்துள்ளார்.
அவரை பிடித்து இந்திய வீரர்கள் விசாரணை நடத்தியதில், அந்த சீன வீரரின் பெயர் வாங் யா லாங் என்பதும், அவர் இந்திய பகுதிக்குள் தவறுதலாக வந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதன் பிறகு ஆக்சன் உள்ளிட்ட மருத்துவ உதவிகள், உணவுகள் மற்றும் உடை போன்றவற்றை இந்திய ராணுவ வீரர்கள் வழங்கினார். எல்லையைத் தாண்டி வந்த சீன வீரரை, சுசூல் மோல்டோ என்ற பகுதியில் அந்த நாட்டினரிடம் இந்திய ராணுவம் அவரை பாதுகாப்பாக ஒப்படைத்தது.