கொரோனவை முதல் முதலாக கணித்த பிரபல ஜோதிடர் அடுத்த 6 மாதங்களில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் குறித்து தமது கணிப்பை வெளியிட்டு உள்ளார்.
பிரிட்டன் ஜோதிடரான ஜெஸ்ஸிகா ஆடம்ஸ் கடந்த 2019 பிப்ரவரி மாத துவக்கத்திலேயே கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 2020ஆம் ஆண்டு பெரும் சேதத்தை விதைக்கும் என தமது கருத்தை வெளியிட்டார். அதோடு முதல் பலி சீனாவின் வூஹான் நகரில் ஜனவரி 10ஆம் தேதி நிகழ்ந்தது என்பதையும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது அவர் இனி வரும் ஆறு மாதங்களில் உலகின் முக்கிய நபர்கள் தொடர்பாகத் தனது கணிப்பை வெளியிட்டு உள்ளார்.
அதில் கொரோனா தொற்றுக்கான மருந்து வெளியாகும் என்றாலும் அது எதிர்பார்த்த பலனைக் கொடுக்காது என்றும் தொற்றுடன் இணைந்து வாழ்வதே சிறந்தது என்றும் இன்னும் சில காலங்களுக்கு தொற்றின் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதேபோன்று ஜெசிக்கா 2021 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதிக்கு சிறந்த ஆண்டாக அமையும் என்றும் அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் வில்லியம் கேட் தம்பதிகள் உடனான ஹாரி மேகன் தம்பதிகளின் உறவு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க தேர்தலில் இந்த முறை குடியரசு கட்சி ஆட்சியை தக்க வைக்காது என்றும் பெண்ணியவாததிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒருவர் அமெரிக்காவிற்கு ஜனாதிபதியாக வருவார் என தெரிவித்துள்ளார். தற்போதைய கருத்துக் கணிப்பு படி ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பிடனே முன்னணியில் இருந்து வருகிறார். 2016ல் ட்ரம்ப் வெற்றி பெற்றது போன்ற ஒரு நிலை உருவாகும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது.
பிரக்சிட் தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாமதப்படுத்துவார் என்று ஜெஸ்ஸிகா கூறும் நிலையில் இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகுவதாக கணித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டில் ஒருகட்டத்தில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை கைவிடும் சூழலும் உருவாகலாம் என சுட்டிக்காட்டியுள்ளார். 2026 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அது நிரந்தரமான தீர்வை எட்டும் என்றும் ஜெஸ்ஸிகா கணித்துள்ளார்.