Categories
தேசிய செய்திகள்

ரூ.10,00,00,000 மதிப்பிலான…. ”செல்போன் கொள்ளை”…. கண்டெய்னர் லாரியோடு கடத்தல் …!!

சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான கைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்துதாக கூறப்படுகிறது.

அந்த கும்பல் லாரி ஓட்டுனர்கள் தாக்கிவிட்டு அவர்களை கயிறுகளால் கட்டி, லாரியை கடத்திச் சென்றுள்ளனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அழகு பாவை என்கின்ற இடத்தில் அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு, லாரியின் கண்டனர் பூட்டுகளை உடைத்து உள்ளே இருந்த சுமார் 10 கோடி மதிப்பிலான செல்போன்களை மாற்று 3 லாரி மூலமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாரி ஓட்டுநர்கள் புகாரையடுத்து சூளகிரி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |