வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
வர இருக்கின்ற 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக மிகவும் பலவீனமாக உள்ளது . குறிப்பாக இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 47 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. எனவே பலவீனமான பகுதியாக உள்ள இந்த மண்டலத்தில் முதல் முறையாக கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
கொரோனா காலம் என்பதால் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆலோசனை கூட்டம் இரண்டு கட்டமாக நடைபெற்றது. கொங்கு மண்டலத்தில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் இரண்டு கட்டமாக ஆலோசிக்கிறார். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர், நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், பேரூர் கழக செயலாளர் என 218 பேரிடம் கூட்டத்தில் கலந்துகொண்டு உள்ளார்கள்.