நாட்டில் உள்ள வங்கிகள் பணப்பரிவர்த்தனையில் மிகப்பெரிய மைல் கல்லாக இருந்து வருகிறது சாமானியர் முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை வங்கியை சார்ந்தே பண பரிவர்த்தனையை செய்து வருகின்றனர். வங்கிகள் செயல்படாத போது ஏடிஎம் மிஷின் மூலம் ரொக்கப் பணத்தை செலுத்துவதற்கு வசதிகள் இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் வங்கிகள் தற்போது ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் படுத்தி உள்ளன அதன்படி
விடுமுறை நாட்கள், மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரையிலான வங்கி வேலை நேரம் இல்லாத தருணங்களில் பணம் செலுத்தும் மிஷின் மூலம் ரொக்கப் பணத்தை செலுத்துவதற்கு ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மேலும் ஒரு மாதத்தில் ஒரு முறை அல்லது பல முறை ரூ10,000 மேல் பணம் செலுத்தும் பட்சத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.