காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கண்டித்த பின்னரும் பாஜக பெண் வேட்பாளர் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேச முன்னாள் முதல் அமைச்சருமான திரு கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாப்ரா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் திருமதி இமாதி தேவியை காங்கிரஸ் மூத்த தலைவர் திரு கமல்நாத் சர்ச்சைக்குரிய வார்த்தையில் விமர்சித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய திரு கமல்நாத் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராகுல் காந்தி தனது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தி உள்ளார் எனவும், யாரையும் அவமதிக்கும் வகையில் பேசாத போது தாம் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.