Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மாலை நேரம்…டீயுடன் சாப்பிட…ஒரு ஸ்னாக்ஸ் ரெசிபி…!!

சமோசா செய்ய தேவையான பொருள்கள்:

மைதா                                                 – அரை கிலோ
உருளைக்கிழங்கு                         –  ஒரு கிலோ
பச்சை மிளகாய்                             –  4
மிளகுத்தூள்                                    – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி                                  – கால் கப்
பெரிய வெங்காயம்                      – அரை கிலோ
பச்சை பட்டாணி                            – கால் கிலோ

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கையும், பச்சை பட்டாணியையும்  தனியாக வேக வைக்கவும். உருளைக்கிழங்கு நன்கு வெந்த பின், அதன் தோலை உரித்து மசித்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வதக்கி கொள்ளவும். அதனுடன்  மிளகாய்த்தூள், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி, 2 கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கி கொள்ளவும்.

அதனை அடுத்து  மைதா மாவை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிருதுவாக பிசைந்து, அதில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து பூரி அளவுக்கு பெரியதாக உருட்டி கொள்ளவும்.

வட்ட வடிவில் உருட்டி வைத்த மாவின் நடுவே, உருளைக்கிழங்கு மசாலாவை ஒரு ஸ்பூன் அளவு  வைத்து, அதனை முக்கோண வடிவில் மடித்தபின், அதன் விளிம்பில் உள்ள  பகுதியையும், நடுப்பகுதியையும்  சற்று அழுத்தம் கொடுத்து ஒன்றோடு ஒன்றாக ஒட்டும் படி செய்து கொள்ளவும்.

பின்னர், அடுப்பில் வாணலியை வைத்து பொரித்து எடுக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மடித்து வைத்த மாவை அதில் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கத்திலும் பொரித்து எடுக்கவும்.

அதை அப்படியே எடுத்து பரிமாறினால் சுவையான, மொறு மொறுவென சமோசா ரெடி.அதனை  டீ யுடன் பரிமாறி கொள்ளலாம்

Categories

Tech |