Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவு நாள்… குடி மக்களுக்கு உதவ எப்போதும் தயார்… பிரதமர் மோடி புகழாரம்…!!!

நாட்டின் குடிமக்களுக்கு உதவ காவல்துறையினர் எப்போதும் தயார் நிலையில் இருப்பதைக் கண்டு நாம் பெருமை அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி புகழாரம் கூறியுள்ளார்.

காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்அந்த வகையில் வீரவணக்க தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற காவலர் நினைவு சின்னங்களில் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிலர் உயிர் தியாகம் செய்த காவலர்கள் அதே புகழாரம் சூட்டி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் காவலர் வீரவணக்க நினைவு தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” நாடு முழுவதிலும் இருக்கின்ற நமது காவல் துறையினர் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிப்பது தான் காவலர் நினைவு நாள்.

கடமையில் இருக்கும் போது உயிர் தியாகம் செய்த அனைத்து காவல் துறையினரையும் நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தியாகம் மற்றும் சேவை எப்போதும் நம் நினைவில் இருக்கும். நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது இலிருந்து கொடூரமான குற்றங்களுக்கு தீர்வு காணும் வரையில், பேரழிவு காலத்தில் உதவி செய்வதிலிருந்து கொரோனாவுக்கு எதிராக போராடுவது வரையில் நம் காவல்துறையினர் எப்போதும் சிறப்பான சேவை செய்து வருகிறார்கள். குடி மக்களுக்கு உதவுவதற்கு எப்போதும் தயார் நிலையில் இருக்கும் காவல்துறையினரை கண்டு நாம் பெருமை கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |