கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – கால் கிலோ
பச்சை பட்டாணி – 1 கப்
கேரட் – 150
காலிஃப்ளவர் – சிறியது
பீன்ஸ் – 200
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 4
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்
பிரட்தூள் – 1 கப் மைதா – 1 கப்
எண்ணெய் – 100 மில்லி
செய்முறை:
கேரட், காலிபிளவர், பீன்ஸ், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் என அனைத்தையும் வெட்டி கொள்ளவும்.
வாணலியில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர்,பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்பு அதனுடன் பிசைந்து வைத்த காய்கறிகளையும் சேர்த்து நன்கு சிவக்க வதக்கி கொள்ளவும்.
பின்பு அதில் கொத்தமல்லி தழை சேர்த்து, வதக்கிய காய்களை ஆறியபின் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.மேலும் மைதா மாவை எடுத்து மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் பிசைந்து வைத்த உருண்டையை தட்டையாக தட்டிக் கொள்ளவும்.
அதனை தொடர்ந்து, அந்த உருண்டையை கலக்கி வைத்துள்ள மைதா மாவில் முக்கி, பின் பிரட் பொடியிலும் இரு பக்கங்களிலும் வைத்து தடவி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான கட்லெட் ரெசிபி தயார்.