சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். தேவையற்ற அலைச்சல் உண்டாகும். ஆரோக்கியத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரவு இன்று சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராமல் கிடைக்கும் உதவியால் கடன்கள் ஓரளவுக்கு குறையும். செய்யும் காரியங்களில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படக்கூடும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் பெறலாம். இன்று நீங்கள் முருக வழிபாடு செய்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.