விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக திரைத்துறையை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகர் விஜயின் அப்பாவும், தயாரிப்பாளருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்ற செய்தி வெளியாகியதை தொடர்ந்து அவர் அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் பாஜகவில் இணைவது என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. எனக்கு என்று ஒரு அமைப்பு இருக்கின்றது, அந்த அமைப்பை நான் வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றேன்.
கொஞ்சம் கொஞ்சமாக வலுப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். அதில் தான் என்னுடைய முழு கவனமும் இருக்கின்றது. மத்த கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தேவைப்படும்போது விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும். மக்கள் விருப்பப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் கூப்பிடும் போது நாங்கள் அரசியலுக்கு வருவோம். நாங்களா வந்து மக்களை கூப்பிடுவதை விட, மக்கள் வா அப்படி என்று கூப்பிடும் போது வருவது தான் இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும் என்று சந்திரசேகர் தெரிவித்தார்.