தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள், நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட உயர்நிலை படிப்பிலும் பல்வேறு விஷயங்கள் கொண்டு வரபட்டுள்ளது.
இந்நிலையில் இதனை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்கள் கருத்துகளை கேட்டு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டு அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டிவிட்டதை நாம் உணர முடிகின்றது. இன்னும் ஒரு சில மாதத்தில் புதியகல்விக்கொள்கை முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என தெரிகின்றது.
தமிழகத்தில் பார்த்தோம் என்றால், ஒரு மாதத்திற்கு முன்பாக உயர்கல்வித் துறைச் செயலாளர் உள்ளிட்ட முக்கியமான உயர் கல்வித் துறையை சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் ஆன்லைன் வழியாக மாணவர்களிடம், பொதுமக்களிடம் புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்துக் கேட்டார்கள். தமிழக அரசும் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை தொடரும் என்று தெரிவித்து இருந்தார்கள். உயர்கல்வி அளவில் சில திருத்தங்கள் கேட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. கருத்து கேட்பிலும் கூட ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக ஒரு சில நபர்களிடம் மட்டும் மட்டும் கருத்துகளை கேட்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக கருத்து கேட்கவில்லை என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கை அமல் படுத்துவதற்கான பணிகளை பல்கலைக்கழக மானியக்குழு தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. தமிழக அரசு தமிழகம் சார்பில் தெரிவித்துள்ள இரு மொழிக் கொள்கைக்கு எந்த ஒரு முடிவும் தெரிவிக்காமல் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை படுத்துவதற்கான முயற்சியில் தீவிரமாக மேற்கொண்டு வருவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.