ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால் நடித்த ஆக்ஷன் என்ற திரைப்படத்தை ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. 20 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தரும் என்று மினிமம் உத்தரவாதத்தின் அடிப்படையில் இந்த படம் வெளியாகியது. ஆனால் 11 கோடி அளவுக்கு லாபம் ஈட்ட பட்டதாகவும் 8 கோடியே 30 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தற்போது விஷால் நடிப்பில் இணையதளம் மற்றும் OTTயில் சக்ரா படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்து சக்ரா படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அந்த படத்தை தங்களுக்குச் சேர வேண்டிய 8 கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை தரும்வரை வெளியிடக்கூடாது என்றும் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவில், முதல் கட்டமாக நாலு கோடி கான உத்தரவாதத்தை விஷால் இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
விஷால் 4கோடி செலுத்தும் பட்சத்தில் படத்தை வெளியிடலாம் என்றும், அதே சமயத்தில் சக்ரா படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில் மீதமுள்ள 4 கோடியே 30 லட்சத்து உத்தரவாதத்தை செலுத்த வேண்டுமென்று விசாரித்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் நீதிபதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் டிசம்பர் 23 ஆம் தேதி நியமிக்க வேண்டும் என ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு ஒரு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ம் தேதிக்குள் மத்தியஸ்தரை நியமிக்காத பட்சத்தில் விஷால் செலுத்திய உத்தரவாதம் தானாக விலகி சென்றுவிடும் என்றும் உத்தரவிட்டு ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து இருக்கிறார்கள்.