Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(22-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம்

22-10-2020, ஐப்பசி 06, வியாழக்கிழமை, சஷ்டி திதி காலை 07.40 வரை பின்பு வளர்பிறை சப்தமி.

பூராடம் நட்சத்திரம் பின்இரவு 12.58 வரை பின்பு உத்திராடம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

கரி நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

இன்றைய ராசிப்பலன் –  22.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் எதிர்பாராத செலவுகள்  உண்டாகும். வீட்டில் குழந்தைகளால் அமைதி நிலைமை உருவாகும்.எந்த செயல் செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்யுங்கள் அதுவே நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வ வழிபாட்டை மேற் கொள்வீர்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு மனக் கஷ்டம் இருக்கும். வேறு சிலர் மீது கோபம் கொள்வீர்கள். மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிருங்கள். உத்யோகத்தில் பெரிய தொகையை செலவிடுவது நல்லது ஆகாது. எதிலும் கவனமாக செயல்படுங்கள் அதுவே உத்தமம்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் செலவுகள் குறைந்து இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.நண்பர்களின் சந்திப்பால் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். கடன் தொல்லை தீரும். தொழிலில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

கடகம்

உங்களின் ராசிக்கு எதிர்பாராத வகையில் தன வரவும் உண்டாகும். சுப முகூர்த்தம் கைகூடும். தொழிலில் எதிரிகளால் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்ல மேற்கொள்வீர்கள். கொடுத்த கடன்கள் அனைத்தும் வசூலாகும். உறவினர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் வரும். வீட்டில் குழந்தைகளால் மன சங்கடம் ஏற்படும். உத்தியோகத்தில் தேவையில்லாத இடமாற்றம் ஏற்படும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள் அதுவே நல்லது. உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும்.

கன்னி

உங்கள் இராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். குழந்தைகள் வீதியில் சுப செலவு உண்டாகும். சேமிப்புகள் குறையும்.எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சொத்து விஷயங்களில் இழுபறி நிலை இருக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு புது உற்சாகமாக வேலைகளை செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருந்த பிரச்சினைகள் அகலும். திருமண காரியங்களில் அனுகூல பலன் கிடைக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் எண்ணம் இருக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு நிலை இருக்கும். குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தே இருக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் அடைய சிக்கல்கள் உண்டாகும். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். சுபமுகூர்த்த பேச்சுவார்த்தைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் மேலதிகாரிகளின் அன்பு ஆதரவு பெறுவீர்கள். தொழில் ரீதியில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் உருவாகும். பொருளாதார நிலையில் நெருக்கடி உண்டானது. உத்தியோக வளர்ச்சிக்கான செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குழந்தைகளுடன் இருந்த கருத்துவேறுபாடு விலகும். தொழிலில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கும். உற்றார் உறவினர்கள் வருகை ஆனந்தத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் உடன் உள்ளவர்கள் பொறுப்புடன் இருப்பார்கள். இலாபம் கிடைக்கும். வெளியிடங்களில் இருந்து நற்செய்தி  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொருட்கள் கிடைக்கும்.

Categories

Tech |