டெலிவரி செய்ய வேண்டிய போனை விற்ற டெலிவரி பாய் கைது செய்யப்பட்டுள்ளார்
டெல்லியில் அமேசான் நிறுவனத்தின் டெலிவரி பாயாக 22 வயது இளைஞர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இவர் கஸ்டமர் ஆர்டர் செய்து அமேசானில் இருந்து அனுப்பப்பட்ட செல்போனை வேறு ஒருவரிடம் விற்று காசை பெற்றுக் கொண்டார். அதன் பின் போனுக்காக காத்து இருந்த கஸ்டமரிடம் உங்கள் ஆர்டர் கேன்சல் ஆகிவிட்டது என கூறியுள்ளார். அதோடு நீங்கள் செலுத்திய பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு விரைவில் வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் வாடிக்கையாளர் சேவைப் பிரிவை தொடர்பு கொண்ட கஸ்டமர் ரிபான்ட் பற்றி கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் ஆர்டர் செய்த போன் ஏற்கனவே டெலிவரி ஆகி விட்டது என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் டெலிவரி பாய் மீது சந்தேகம் கொண்ட கஸ்டமர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் வேறு நபரிடம் டெலிவரி பாய் செல்போன் விற்றதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து டெலிவரி பாய் மனோஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விற்கப்பட்ட போனை மீட்டு கஸ்டமரிடம் ஒப்படைத்தனர்.