10 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்தது யார் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்துதாக கூறப்படுகிறது.
அந்த கும்பல் லாரி ஓட்டுனர்கள் தாக்கிவிட்டு, அவர்களை கயிறுகளால் கட்டி, லாரியை கடத்திச் சென்றுள்ளனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அழகு பாவை என்கின்ற இடத்தில் அந்த கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு, லாரியின் கண்டனர் பூட்டுகளை உடைத்து உள்ளே இருந்த சுமார் 10 கோடி மதிப்பிலான செல்போன்களை மாற்று 3 லாரி மூலமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லாரி ஓட்டுநர்கள் புகாரையடுத்து சூளகிரி போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள்.
இந்நிலையில் செல்லபோன்களை கொள்ளையடித்தது யார் என்று எஸ்.பி பண்டித் கங்காதர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி அருகே ரூபாய் 10 கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளை அடித்தவர்கள் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த எஸ்.பி, கடந்த ஆறு மாதத்தில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் இக்கும்பல் செல்போன்களை கொள்ளையடித்தது உள்ளது. கொள்ளையடித்த செல்போன்களை வங்கதேசம், நேபாளத்தில் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.கொள்ளை போன செல்போன்கள் அண்டை நாடுகளுக்கு செல்லாமல் தடுத்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பி தெரிவித்துள்ளார்.