கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் என்ற மூன்றும் தான் அதிமுகவின் இலக்கணம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெருவிழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டலின், திமுக தொண்டர்களின் தியாகங்கள் வீண் போகாது. உங்கள் உழைப்பு வீண் போகாது. உங்கள் தொண்டு வீண் போகாது. எல்லோரோட உழைப்பும் என் உள்ளத்தில் இருத்தி வைத்து இருக்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் நம்மை எல்லாம் இப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா இப்படித்தான் நாம் செயல்பட வேண்டும் என்று விரும்பினார். திமுக இதற்காகத்தான் உருவாக்கப்பட்டது.
முதல் முறை ஆட்சிக்கு வந்தபோது முதலமைச்சராக பொறுப்பேற்ற நம்முடைய கலைஞர் அவர்கள் என்ன சொன்னார் என்றால். நான் முதலமைச்சராக கோட்டையில் இருந்தாலும்அங்கு இருந்தபடியே குடிசைகளை பற்றி சிந்திப்போம் என்று சொன்னார்கள். தன்னுடைய ஆட்சிக்கு மூன்று இலக்கணம் இருப்பதாக நம்முடைய கலைஞர் அவர்கள் அன்றைக்கு சொன்னார்கள். ஒன்று சமுதாயச் சீர்திருத்தத் தொண்டு. இரண்டு வளர்ச்சி பணிகள். மூன்று சமதர்மய போக்கு. இவை மூன்றும் தான் தன்னுடைய ஆட்சியின் இலக்கணமாக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு எடுத்துச் சொன்னார்கள். அந்த அடிப்படையில் தான் அவர் தன்னுடைய ஆட்சியையும் நடத்தினார்.
இன்றைக்கு பார்க்கிறோம் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கு எந்த இலக்கணமும் கிடையாது. ஒரே ஒரு கொள்கை தான்…. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன். இந்த மூன்றும்தான் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சியின் இலக்கணம். அதனால் தான் இந்த அதிமுக ஆட்சியானது எந்த அளவு அழகுக்கு அலங்கோல ஆட்சியாக இருக்குதுன்னு நம்முடைய பேராசிரியர் அருணன் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.
ஒரு ஆட்சி எப்படி நடக்கணும் என்பதற்கு உதாரணம் திமுக ஆட்சி.ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு உதாரணம் அதிமுக ஆட்சி. தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை அல்ல ஐந்து முறை இந்த தமிழ்நாட்டை ஆண்டு இருக்கிறார். ஐந்து முறையும் அவர் செய்த சாதனைகளை பட்டியல் போட்டால் அதற்கு பல மணி நேரம் ஆகும். இருந்தாலும் சுருக்கமா நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.