Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பாத்தீங்களா..! ”எவ்வளவு செஞ்சி இருக்கோம்” உங்களால சொல்ல முடியுமா ? பட்டியலிட்ட முக.ஸ்டாலின் …!!

நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி தலைவர் கலைஞர் தான் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.

தேனி மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரு விழாவில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி. மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகணும் என்ற சட்டம். மகளிருக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இன மக்களுக்கான சமூகநீதி உரிமைகள். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த 7000 கோடி ரூபாய் கடன் ரத்து.

சென்னை தரமணியில் டைடல் பார்க். சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம். சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்கள் உருவாக்கம். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். தமிழ்நாடு குடிநீர் வாரியம் உருவாக்கியது. நமக்கு நாமே திட்டம். அண்ணா மறுமலர்ச்சி திட்டங்கள். அவசர ஆம்புலன்ஸ் 108 சேவை அறிமுகம். இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டம். மினி பஸ் நிலையம் கொண்டு வந்தது. உழவர் சந்தைகளை அமைத்தது. ஏழை பெண்களுக்கு திருமண உதவி. கர்பனி பெண்களுக்கு உதவி. ஆகிய பல்வேறு திட்டங்கள்.

பல்லாயிரம் கோயில்களுக்கு திருப்பணிகள். அரசு வேலை வாய்ப்புக்கு பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு. உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு. இலவச எரிவாயு இணைப்போடு கூடிய அடுப்புகள் வழங்கும் திட்டம். மகளிர் சுய உதவி குழு அமைத்தல். அனைவரும் இணைந்து வாழ சமத்துவ மதங்கள். இஸ்லாமிய மக்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது. நுழைவுத்தேர்வு ரத்து. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியது.

சேலம் உருக்காலை சேலம் புதிய ரயில்வே மண்டலம். குடிநீர் திட்டம். ஒகேனக்கல் கூட்டு  ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம். ஆசியாவிலேயே பெரிய நூல் நிலையமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகியவை உருவாக்கம். மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் ஆகியோருக்கு மறுவாழ்வு வழங்குதல். ஏராளமான பல்கலைக்கழகங்கள் மருத்துவ கல்லூரிகள். கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கியது.இப்படி நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.

நான் கேட்கிறேன் இப்ப நடக்கிற அதிமுக ஆட்சியில் இது மாதிரி ஒரு சாதனையை சொல்ல முடியுமா? இப்படி வரிசைப்படுத்தி பட்டியலிட முடியுமா? முடியும் சாதனை இல்லை அது வேதனையை தான் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சொல்லணும் என்றால் நீட் தேர்வு கொடுமை காரணமா 13 மாணவர்கள் தற்கொலை பண்ணிக் கொண்டு இருந்துட்டு இருந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியாக ஊர்வலம் போன தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சிதான் இந்த ஆட்சி.

சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜெயராஜ் பெணிக்ஸ் ஆகியோரை அடித்தே கொள்ளுகிற ஆட்சி இந்த ஆட்சி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை  சென்னை கடற்கரையில் இருந்து அடித்து விரட்டுவது மட்டுமில்லாமல் அங்கிருந்த ஆட்டோக்களுக்கு தீவைத்து கலவரத்தை உருவாக்கி ஆட்சி இந்த ஆட்சி என ஸ்டாலின் பட்டியலிட்டார்.

Categories

Tech |