Categories
அரசியல் மாநில செய்திகள்

புள்ளி விவரத்தோடு… புட்டு புட்டு வைத்த ஸ்டாலின்…. அதிர்ச்சியில் அதிமுக …!!

அதிமுக ஆட்சி வேதனை என்று தேனி மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெருவிழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின்  பேசினார்.

அதிமுக ஆட்சியில் வேதனையை தான் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சொல்லணும் என்றால் நீட் தேர்வு கொடுமை காரணமா 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூ ட வலியுறுத்தி அமைதியாக ஊர்வலம் போன தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சிதான் இந்த ஆட்சி. சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜெயராஜ் – பெணிக்ஸ் ஆகியோரை அடித்தே கொள்ளுகிற ஆட்சி இந்த ஆட்சி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை  சென்னை கடற்கரையில் இருந்து அடித்து விரட்டுவது மட்டுமில்லாமல், அங்கிருந்த ஆட்டோக்களுக்கு தீவைத்து கலவரத்தை உருவாக்கிய  ஆட்சி தான் இந்த ஆட்சி என்று குறிப்பிட்டார்.

கொடநாடு பங்களாவில் கொலை:

மேலும் ஸ்டாலின் கூறியதில், எட்டு வழி சாலை அமைத்தால் தங்களுடைய நிலம் எல்லாம் பரி போய்விடும் என்று போராடிய அப்பாவி மக்களை கைது செய்து சிறைக்கு அனுப்பிய ஆட்சிதான் இந்த ஆட்சி. மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்க்கிறோம் என்பதற்காக சமூக செயல்பாட்டாளர்களை கைது செய்து அவர்களை சிறையில் அடைத்த ஆட்சி தான் இந்த ஆட்சி. கொடநாடு பங்களாவில் கொலை செய்து கொள்ளை அடித்த விவகாரங்களில் எல்லாம் அதிகாரத்தில் இருப்பவர்கள் பெயரே அடிபட்டது.

டெல்லிக்கு அடகு வைத்த ஆட்சி:

பொள்ளாச்சியில் இளம் பெண்களை மிரட்டி படமெடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவர்களை எல்லாம் காப்பாற்றிய ஆட்சி இந்த ஆட்சி. விவசாயிகளின் உதவித்தொகையை போலி விவசாயிகளுக்கு பெற வழிவகை செய்து கொடுத்த ஆட்சிதான் இந்த ஆட்சி. குடிமரமத்து என்ற பெயரால் ஆளுங்கட்சியினர் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்த ஆட்சிதான் இந்த ஆட்சி. 2017 – 2018 – 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் அரசு சொன்ன புள்ளிவிவரப்படி 4800 பேர் டெங்குவால் பலியானதற்கு காரணமான ஆட்சி இந்த ஆட்சி. தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் டெல்லிக்கு அடகு வைத்த ஆட்சிதான் இந்த ஆட்சி.

நீட் தேர்வு, ஜிஎஸ்டி;

நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் போட்டு அனுப்பிய பிறகும் அதை வைத்து உரிய விலக்கை பெறமுடியாத ஆட்சி தான் இந்த ஆட்சி. விவசாயத்தையே  வேறு அருக்கக்கூடிய கூடிய 3 வேளாண் சட்டங்களை ஆதரித்த ஆட்சிதான் இந்த ஆட்சி. சிறுபான்மையினருக்கு விரோதமான குடி உரிமை திருத்தச்சட்டத்தை  ஆதரித்த ஆட்சி தான் இந்த ஆட்சி. மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியையும் வாங்க முடியாமல், ஜிஎஸ்டி தொகையையும் பெறமுடியாத ஆட்சிதான் இந்த ஆட்சி. முதலமைச்சர் மீதான ஊழல் புகார் சிபிஐ கிட்ட இருக்கு. துணை முதலமைச்சர் மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை கிட்ட இருக்கு.

சிபிஐ விசாரணை:

முதலமைச்சர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீதான 89 கோடி ரூபாய் ஆர்கே நகர் தேர்தல் புகார் வருமானவரித் துறையிலும், தேர்தல் ஆணையத்திடம் சிக்கிக்கொண்டு இருக்கு. அமைச்சர் வேலுமணி மீதான புகாரை யார வச்சு விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பி இருக்கு.  அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு சிபிஐ விசாரித்துக்கொண்டு இருக்கு. இந்த ஆட்சியில் தான் தலைமை செயலகத்திலேயே வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இந்த ஆட்சியில்தான் டிஜிபியையே  சிபிஐ விசாரித்து விட்டு இருக்கு.

நீதிமன்றம் உத்தரவு:

முதலமைச்சருக்கு நெருக்கமான செய்யாதுரை  வீட்டில் கோடிக்கணக்கில் பணமும், தங்க கட்டிகளையும் கைப்பற்றப்பட்டு இருக்கு. துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமான இருக்கக்கூடிய சேகர் அணி வீட்டில் கோடிக்கணக்கில் பணமும் தங்க கட்டிகளும் கைப்பற்றி இருக்கிறார்கள். அதிமுக அரசால் போடப்பட்ட பலநூறு கோடி மதிப்பில் உள்ள டெண்டர்கள் எல்லாத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு போட்டு இருக்கு.

எம்எல்ஏவுக்கு அமைச்சர் மிரட்டல்:

ஆளுங்கட்சி எம்எல்ஏவுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொலை மிரட்டல் விடுவதாக அந்த அதிமுக எம்எல்ஏ-வே பேசி இருக்கிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு அவரது துறையில் நடக்கிறதே தெரியவில்லை. நீட் சட்டங்கள் நிராகரிக்கப்பட்டது சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு தெரியவில்லை. பழங்குடி சிறுவனை அழைத்து தனக்கு செருப்பு  மாட்டிவிட சொன்னாரு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். தன்னை விமர்சித்து எழுதின பத்திரிக்கையாளர்களை கைதுசெய்து சிறையில் அடைக்கிறார் அமைச்சர் வேலுமணி. முதலமைச்சரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் எழுதினால் அவர்களை எல்லாம் கைது பண்ணுகிறார்கள்.

திருட்டு தனம்:

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைகளை அவமதிக்க படுவது  மட்டுமில்லை, தமிழகத்தில் அது வாடிக்கையாக நடந்து கொண்டு இருக்கு. பெரியார் சிலைக்கு பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதற்காக 3 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அண்ணா பெயரிலேயே கட்சியே நடத்திக்கிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தையே ஒரே நாளில் சூரப்பாவுக்கு திருட்டுத்தனமா விக்கிறதுக்கு  திட்டம் போட்டுட்டாங்க.

நாடகங்கள்:

தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சம் பேர்…. 6 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டும், பத்தாயிரம் பேர் இறந்தும் போயிருக்கிறார்கள் இவைதான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியினுடைய சாதனைகள். இது எல்லாம் மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது. அதுக்காகவே திட்டமிட்டு எடப்பாடி பழனிச்சாமி – ஓ பன்னீர்செல்வம் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிற மாதிரி ஒரு நாடகத்தை நடத்தி, மக்களை திசைதிருப்பி கொண்டிருக்கிறார்கள். பதவி இருக்கிறவரை இவர்கள் ரெண்டு பேரும் பிரியவே மாட்டார்கள். அவர்கள் உள்ளே நடக்கிற சண்டை எல்லாம் மக்கள் முன்னே நடத்தப்படக் கூடிய நாடகங்கள் என முக.ஸ்டாலின் பேசினார்.

அதிமுக அதிர்ச்சி:

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வர இன்னும் ஆறு, ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில் ஸ்டாலின் அதிமுகவின் தவறுகளை சொல்லி பேசியிருப்பது தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுக தொண்டர்களையும் – நிர்வாகிகளையும் தயார் செய்ததைப் போல இருந்தது. மேலும் அதிமுகவின் கொடூரங்கள் ஒவ்வொன்றையும் பட்டியலிட்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள் என்பதை உணர்த்தும் வகையில் ஸ்டாலினின் பேச்சு இருந்ததால்,  தேர்தலில் ஸ்டாலின் குறிப்பிட்ட அத்தனை விஷயமும் பிரதிபலிக்கும் என்று அதிர்ச்சியில் அதிமுக வட்டாரங்களில் இருந்து வருகின்றன.

Categories

Tech |