Categories
தேசிய செய்திகள்

“அப்பாவுக்கு சரக்கு வேணும்” 200 ரூபாய் குறையாம பிச்சை எடுக்கணும்… சிறுவனின் அவல நிலை…!!

பெற்ற மகனை குடிப்பதற்காக பிச்சை எடுத்த கட்டாயப்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கொடூர தந்தை ஒருவர் தனக்கு மது அருந்த வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் தனது 11 வயது மகனை கொடுமைப்படுத்தி பிச்சை எடுக்க வைத்துள்ளார். இதைப் போன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மது தேவைப்பட்டதால் சிறுவனிடம் பிச்சை எடுக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் மறுப்பு தெரிவித்ததால் சிறுவனை கடுமையாகத் தாக்கியதோடு சத்தம் வெளியில் கேட்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதனால் மிகுந்த வேதனை அடைந்த சிறுவன் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது நிலை குறித்து கூறியுள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து சென்று சிறுவனின் அவல நிலையைப் பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் பள்ளிக்கு சென்று வந்ததும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தந்தை நன்றாக உதவியதும் தெரிய வந்தது. ஆனால் சிறுவனின் தந்தை மது தேவைப்படும்போது கட்டாயப்படுத்தி சிறுவனை பிச்சை எடுக்க வைத்துள்ளார்.

அதிலும் சிறுவன் கூறுகையில் 200 ரூபாய்க்கு குறைவாக பிச்சை எடுத்து வந்தால் கடுமையாகத் தாக்கி தந்தை துன்புறுத்துவார் என்று கூறியுள்ளார். தன்னை மட்டுமல்லாது தனது அம்மாவையும் இதேபோன்று அடித்து கொடுமைப் படுத்துவார் என சிறுவன் கூறியுள்ளான். இதனை தொடர்ந்து அந்த தந்தையை கைது செய்த காவல்துறையினர் சிறுவனையும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.

Categories

Tech |