Categories
தேசிய செய்திகள்

விழாக்கால சிறப்பு ரயில்களில் கூடுதல் கட்டணம்…!!

விழாக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை ரயில் கட்டண உயர்வாக கருதக் கூடாது என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் திருவிழாக் காலங்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் வழக்கமான  ரயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் கட்டண உயர்வு குறித்து செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த கூடுதல் கட்டணத்தை ரயில் கட்டண உயர்வாக கருதக்கூடாது என்றும் விமானங்களில் பயணிகள் அதிகம் பேர் பயணிக்கும் காலத்தில் கட்டணங்கள் உயர்த்த படுவதைப் போல திருவிழாக்காலங்களில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் கட்டணங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |