முந்திரிப்பருப்பு பிஸ்கட் செய்ய தேவையான பொருட்கள்:
முந்திரிப் பருப்புத் தூள் – 50 கிராம்
சீனி – 150 கிராம்
முட்டை – 1
வெண்ணெய் – 150 கிராம்
செய்முறை:
மிக்சி ஜாரை எடுத்து அதில் சீனியை சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.
மைதா மாவை நன்கு சலித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை எடுத்து அதில் பொடித்த சீனியையும் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் கடைந்த முட்டையையும், எசன்ஸையும் சேர்க்கவும். மேலும் மாவை சலித்து அதனுடன் முந்திரிப்பருப்பு தூளையும் சேர்க்கவும்.
பின்பு எல்லாவற்றையும் சேர்த்து பிசையவும். தேவையானால் பால் சேர்க்கலாம் பிசைந்த மாவை பூரிக் கட்டையில் சிறியதாக முந்திரி பருப்பு அளவில் வில்லைகளாக தேய்த்து கொள்ளவும்.
அதை எடுத்து ஓவனில் 350 டிகிரியில் பிஸ்கட் செய்யும் பிளேட்டில், தேய்த்து வைத்த மாவை வைத்து 10 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான முந்திரிப்பருப்பு பிஸ்கட் தயார்.