முகத்தில் உள்ள பருக்கைளை போக்க ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு முன் காலத்தில் புற்றுமண் பூசும் வழக்கம் இருந்திருக்கிறது. தற்போது உள்ள பெண்கள் பவுடர், கிரீம், ரசாயண கலவை பொருட்கள் என அதிகம் முகத்தில் பூசுவதால் சருமங்களில் அதிக அழுக்குகள் தங்கி தேவையற்ற பருக்கள், கரும் புள்ளிகள், எண்ணெய் பசைகள் அதிகம் ஏற்படுகிறது.
முகத்தில் அழுக்குகள் படியாமல் இருப்பதற்காக முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தம் செய்வது அவசியமாக கருதப்படுகிறது. முக சருமத்தில் செபாசியஸ் என்னும் சுரப்பிகள் சுரக்கப்பட்டு “சீபம் “என்னும் எண்ணெய்க் கசிவு முகத் தோலின் மீது படிவதால் பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அவை முகப்பருக்களாக வெளிப்படுகிறது.
மக்கள் நவநாகரீக உணவாக கருத்தப்படும் டிரைபுட்ஸ்களை அதிகமாக பயன்படுத்தபதுவதால் முகத்தில் பருக்கள், எண்ணெய் பசைகள் அதிகம் உருவாகிறது. அதனால் டிரைபுட்ஸ்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்றாகும்.
பெண்களுக்கு முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்துவிட விரல்கள் முயற்சிக்கும் . முகத்திலுள்ள பருக்களை கிள்ளினால் பெரும் விளைவுகள் உண்டாகும்.இதணை போக்க முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள்.
வேப்பிலை பொடியுடன், மஞ்சள்தூள், சந்தனம் சேர்த்து நீர் விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி வருவதால் முகத்திலுள்ள பருக்கள் எளிதில் மறையும்.
நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின் மீது தடவலாம்.
தேன், சர்க்கரை சேர்த்துக் குழைத்து, அதை முகப்பருக்களின் மீது பூசி வர விரைவில் பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
ஊமத்தம் பூவை கசக்கி பருக்களின் மீது பற்று போடலாம். எலுமிச்சம் இலைகளை மட்டும் அரைத்து பூசலாம்.
துளசி 4 இலை, வேப்பந்தளிர், கடலை மாவு ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து அரைத்து முகத்தில் பூசி, 5 நிமிடம் கழித்து மிதமான தண்ணீரில் கழுவினால் தோல் மிருதுவாகி பருக்கள் மறையும்.
வாரத்திற்கு மூன்று நாட்கள் பப்பாளி பழத்தை முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகத்தை பளப்பளப்பாகும்.