சிக்கன் விந்தாரி செய்ய தேவையான பொருட்கள்:
கோழி – 1 கிலோ
வத்தல் – 15
பெல்லாரி வெங்காயம் – 100 கிராம்
கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
நல்லெண்ணை – 6 கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
தேங்காய் – 2
கடுகு – 2 தேக்கரண்டி
கசகசா – 2 தேக்கரண்டி
பூண்டு – 1
இஞ்சி – 1 அங்குலத் துண்டு
செய்முறை:
முதலில் கோழியின் முடியை எடுத்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கொத்தமல்லி, சீரகம், கசகசா, வற்றல் எல்லாவற்றையும் நன்கு வறுத்து அரைக்கவும். இஞ்சி, பூண்டு, தேங்காய் தனியாக அரைத்து கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை நீளமாக வெட்டி கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணெய் விட்டு கடுகு, நீளமாக வெட்டிய வெங்காயத்தை வதக்கி, அரைத்த வைத்த இஞ்சிப்பூண்டு, மசாலாவையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கியவுடன், அதனுடன் 200 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பின்னர் அதனுடன் கோழி துண்டுகள், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், கொத்த மல்லி, மசாலாவையும் சேர்த்து வேகவிடவும். வேகவைத்த கறியானது பாதி வெந்தவுடன், அரைத்த தேங்காய் விழுதையும் போட்டு கொதிக்க விடவும். குழம்பு வற்றி எண்ணெய் பிரிந்ததும் கொத்தமல்லி தழையை சேர்த்து இறக்கவும். சுவையான சிக்கன் விந்தாரி தயார்.