Categories
தேசிய செய்திகள்

 பீகார் சட்டமன்றத் தேர்தல்… தேர்தல் அறிக்கை… நிர்மலா சீதாராமன் வெளியீடு…!!!

பீகாரில் நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ளார்.

பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் வருகிற 28-ஆம் தேதி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியிடப்படும். தற்போது பீகாரில் மத்திய மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்,பாரதிய ஜனதா கூட்டணி அரசு அமைந்திருக்கிறது. இந்த நிலையில் பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதாவின் வாக்குறுதிகள் உள்ளடங்கிய தேர்தல் அறிக்கை ஒன்றை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பீகார் சட்டசபை தேர்தலில் தாங்கள் வெற்றி கண்டால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு ஊசி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ” பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக அதிக அளவு உயர்வை கண்டுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் 3 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வளர்ந்திருக்கிறது. இது சாத்தியமானதுதான். எங்களின் அரசு மக்களுக்கான நல்லாட்சி கே முன்னுரிமை அளித்து கொண்டிருக்கிறது. பீகாரில் உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும். இதுதான் எங்கள் வாக்கெடுப்பு அறிக்கையில் முதல் வாக்குறுதி. என்.டி.ஏ க்கு வாக்களித்து தங்களை வெற்றிபெற செய்யுமாறு மாநில மக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுகிறேன்.

நிதிஷ்குமார் அடுத்த 5 வருடங்களுக்கு பீகார் முதல் மந்திரியாக இருக்க வேண்டும். அவரின் ஆட்சியில் பீகார் முற்போக்கான வளர்ந்த மாநிலமாக மாறும். இங்குள்ள அனைத்து குடிமக்களும் அரசியல் ரீதியாக உணர்திறன் கொண்டவர்கள். கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் நன்றாக அறிவார்கள். எங்கள் அறிக்கையைப் பற்றி யாராவது உங்களிடம் கேள்வி கேட்டால், நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் போது நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கையுடன் பதில் சொல்லலாம்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |