Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதிய சட்டமன்ற தொகுதிகள் அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் சட்டமன்றத் தொகுதிகளை  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் 4 தொகுதிகள், செங்கல்பட்டில் 7 தொகுதிகள், வேலூரில் 5 தொகுதிகள், விழுப்புரத்தில் 7 தொகுதிகள், கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகள், ராணிப்பேட்டையில் 4, திருப்பத்தூரில் 4, தென்காசியில் 5, நெல்லையில் 5 தொகுதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு:

* செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் 1.சோழிங்கநல்லூர் 2.பல்லாவரம்  3.தாம்பரம்  4.செங்கல்பட்டு  5.திருப்போரூர்  6.செய்யூர்  7. மதுராந்தகம் தொகுதிகள் இடம்பெறும்

 * காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகள்  1. ஆலந்தூர்  2. ஸ்ரீபெரும்புதூர்  3. உத்திரமேரூர் 4.காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன

* ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகள்: 1. அரக்கோணம் 2. சோளிங்கர் 3. ராணிப்பேட்டை 4. ஆற்காடு

*திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகள்: 1. வாணியம்பாடி 2. ஆம்பூர் 3. ஜோலார்பேட்டை 4. திருப்பத்தூர்

*விழுப்புரம் மாவட்டத்தில் 4 தொகுதிகள் 1.செஞ்சி  2. மைலம்  3. திண்டிவனம்(தனி) 4. வானூர் (தனி) 5. விழுப்புரம் 6. விக்கிரவாண்டி  7. திருக்கோவிலூர்

*கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகள்: 1. கள்ளக்குறிச்சி(தனி) 2. உளுந்தூர்பேட்டை 3.ரிஷிவந்தியம்  4.சங்காராபுரம்

நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகள்:  1. நெல்லை 2. அம்பாசமுத்திரம்  3. பாளையங்கோட்டை 4.நாங்குநேரி  5.ராதாபுரம்

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகள்: 1. சங்கரன்கோவில்(தனி) 2. வாசுதேவநல்லூர் (தனி)            3.கடையநல்லூர் 4. தென்காசி  5. ஆலங்குளம்

வேலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகள்: 1. காட்பாடி 2. வேலூர்  3. அணைக்கட்டு 4. குடியாத்தம், 5.கீழ்வைத்தியனாங்குப்பம்

Categories

Tech |