டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தக்கூடாது என்ற போட்டி தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் போட்டித் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆன்லைன் தேர்வுகளில் சர்வர் பிரச்சனைகள் ஏற்படுவதோடு கிராமப்புற ஏழை மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்படும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.