அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்திற்கு ‘ப்ளோரிடாவில் ட்ரம்ப் பிரசாரத்தில் எடுக்கப்பட்டது’ என்று தலைப்பு வைத்து பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் மக்கள் கூட்டம் சூழ்ந்த மிகப்பெரிய தெருக்கள் கழுகு கோணத்தில் காட்சி அளிக்கின்றன.
அந்தக் கூட்டம் உண்மையிலேயே தேர்தல் பிரசாரத்தில் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அந்த புகைப்படம் படம் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மாபெரும் இசை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது. வைரல் ஆகி கொண்டிருக்கும் அந்த புகைப்படம் ட்ரம்ப் பிரசாரத்தில் எடுக்கப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அதிக அளவு கூடும் நிகழ்வுக்கு பெரும்பாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.