Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 45 நாள்… வரதட்சணை கேட்ட கணவர்…. புது மணப்பெண் தற்கொலை…!!!

வேப்பூர் அருகே திருமணமான 45 நாட்களில் புதுமணப் பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேப்பூர் அருகே உள்ள வரம்பனூர் என்ற கிராமத்தில் சபரி நாதன் என்பவர் வசித்துவருகிறார். அவர் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் விருதாச்சலம் பூந்தோட்டம் நகரை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமன்றி சங்கீதாவிடம் வரதட்சணை கேட்டு சபரிநாதன் கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சங்கீதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேப்பூர் போலீசார், சங்கீதாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி சங்கீதாவின் தாயார் ஜெயந்தி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மகளை வரதட்சணை கேட்டு சபரிநாதன் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதனால் எனது மகள் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக சபரிநாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

 

Categories

Tech |