தன்னுடன் பேசுவதை நிறுத்திய காதலியை காதலன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்ததால் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுமி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இளைஞன் பலமுறை தனது காதலியை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை.
மெசேஜ் செய்தாலும் காதலியிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காதலன் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு சிறுமியை கொலை செய்து அங்கிருந்த கால்வாயில் வீசி விட்டுச் சென்றனர். மறுநாள் அவ்வழியே வந்தவர்கள் சிறுமியின் சடலம் ஆடை இல்லாமல் கால்வாயில் கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள விசாரணையில் சிறுமியின் காதலன் மற்றும் நண்பர்கள் தான் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதியப்பட்டது.