தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் தற்போது புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள்: சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- காஞ்சிபுரம் மாவட்டம்: ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- வேலூர் மாவட்டம்: காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கீழவைத்தியனாங்குப்பம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- ராணிப்பேட்டை மாவட்டம்: அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- விழுப்புரம் மாவட்டம்: செஞ்சி, மைலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- கள்ளக்குறிச்சி மாவட்டம்: உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- நெல்லை மாவட்டம்: நெல்லை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
- தென்காசி மாவட்டம்: சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.