Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்ட ஆட்சியரின் காரை வழி மறித்த பெண்கள் – வசைபாடிய மாவட்ட ஆட்சியர்

விழுப்புரத்தில் காரை மறைத்து கேள்வி எழுப்பிய பெண்களை மாவட்ட ஆட்சியர் தீட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மீனபுரியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை இரண்டு பெண்கள் சாலையின் நடுவே நின்று மறைத்தனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த காரை விட்டு கீழே இறங்கிய மாவட்ட ஆட்சியர் திரு. அண்ணாதுரை வழி மறைத்து நின்ற பெண்களை ஆண்கள் ஒதுங்கி நிற்கும் போது பொம்பள நீ காரை கையை நீட்டி வழிமறைப்பியா எனவும் எவ்வளவு தைரியம் உனக்கு எனவும் திட்டி தீர்த்தார்.

தங்கள் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை இல்லை என அப்பெண்கள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். எனினும் இதனை கவனத்தில் கொள்ளாத ஆட்சியர் மரியாதையை காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு காரில் ஏறி சென்றார்.

Categories

Tech |