புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை நினைவு சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீடு பிரிக்கப்பட்டுள்ள ஐடிசி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய அவர், “இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்க்க மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. தமிழக அரசு 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு புதுக்கோட்டையில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சிப்பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். பிறகு விராலி மலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பாக காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கடந்த ஆண்டு மட்டும் புதுக்கோட்டையில் 110 இடங்களில் ஜல்லிக்கட்டு நடை பெற்றுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பிரதிபலிக்கக் கூடிய வகையில் ஜல்லிக்கட்டு நினைவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.